புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை (அக்.22) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தர இருக்கிறார். இங்கு காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு செயல்பட இருக்கும் கவிநாடு கண்மாயை பார்வையிடவும், விராலிமலையில் நடந்த கின்னஸ் ரெக்கார்டு ஜல்லிக்கட்டு நடந்த இடத்தில் ஜல்லிக்கட்டு சிலையை திறந்து வைப்பதற்காகவும் வருகை புரிகிறார். மேலும் கரோனா பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்த உள்ளார்.
முதலமைச்சர் வருகையொட்டி, மாவட்டம் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பது, சாலையை அகல படுத்துவது, தூய்மைப்படுத்துவது, ஆங்காங்கே பிளக்ஸ், அதிமுக கொடிகளை வைப்பது போன்ற முன் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமின்றி, காவல் துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி ஆகியோர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் இணைந்து முன்னேற்பாடு பணிகளை தொடர்ந்து பார்வையிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க...இந்திய ராணுவ பிடியிலிருந்த சீன ராணுவ வீரர் ஒப்படைப்பு!