ETV Bharat / state

கழிவறைக்குச்சென்றவரிடம் பணம்பறிப்பு - சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது!

கழிவறைக்குள் சென்றவரைப் பின் தொடர்ந்து சென்று பணத்தை வழிப்பறி செய்த இளைஞர் உள்பட மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கழிவறைக்கு சென்றவரிடம் பணம் பறிப்பு
கழிவறைக்கு சென்றவரிடம் பணம் பறிப்பு
author img

By

Published : Jun 27, 2022, 10:46 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தைச்சேர்ந்த விஜயகுமார் என்பவர் நேற்று (ஜூன் 26) காலை கோவை குனியமுத்தூர் பகுதிக்குச் செல்வதற்காக காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்தார். அவர் அங்குள்ள பொதுக்கழிப்பிடத்தில் சிறுநீர் கழிக்க சென்றுள்ளார்.

அப்போது அவரைப் பின்தொடர்ந்து சென்ற 2 சிறுவர்கள் மற்றும் ஸ்டீபன் ராஜ் (27) என்ற இளைஞர், கழிவறைக்குள் சென்று விஜயகுமாருடைய கைகளை இறுக்கமாக பிடித்து, சட்டைப் பையிலிருந்த செல்போன் மற்றும் சுமார் ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு தப்பிச்சென்றனர்.

விஜயகுமார் இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொள்ளையில் ஈடுபட்ட ஸ்டீபன் ராஜ், இரண்டு சிறுவர்கள் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட ஸ்டீபன் ராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், சிறையில் அடைத்ததோடு இரு சிறுவர்களையும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: அரசுப்பேருந்து மோதி விபத்து: கட்டுமானத்தொழிலாளி உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.