புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மீமிசல் அருகே செய்யானம் பஞ்சாயத்துக்குட்பட்ட கீழஏம்பல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் சரியாக பணிக்கு வருவதில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இப்பள்ளியில் பணிபுரிந்து வரும் மாரிமுத்து எனும் ஆசிரியர் காலை பள்ளிக்கு வந்து கையொப்பம் இட்டுவிட்டு தனது சொந்த வேலைகளைப் பார்ப்பதற்குச் சென்றுவிடுகிறார்.
இதனால் மாணவர்களுக்கு சரியாகப் பாடம் நடத்தாமல், மாணவர்கள் சரியாகப் படிக்க முடியாமல் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே உடனடியாக கல்வித்துறை அலுவலர்கள் பணிக்குச் சரியாக வராத ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து வேறு ஆசிரியரை பணியமர்த்தி முறையாக பாடம் நடத்தி மாணவர்களின் எதிர்காலத்தை காத்திடவேண்டும்’ எனக் கூறினர்.
இதையும் படிங்க: போக்குவரத்தை சுலபமாக சீர் செய்ய நவீன ரோந்து வாகனம் அறிமுகம்!