ETV Bharat / state

‘சுஜித்தின் மீட்பு பணியில் என்ன நடந்தது?’ - அனுபவங்களைப் பகிர்ந்த வீரமணி

author img

By

Published : Nov 1, 2019, 10:02 PM IST

புதுக்கோட்டை: சுஜித்தை மீட்கும் பணியில் தனது கருவியுடன் முயற்சித்து தோல்வியை தழுவிய வீரமணி, அங்கு என்ன நடந்தது என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அனுபவங்களை பகிர்ந்த வீரமணி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25ஆம் தேதி குழந்தை சுஜித், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சம்பவம் தமிழ்நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், அரசின் பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின் சுஜித்தின் உடல் இறந்த நிலையில் கைப்பற்றப்பட்டது. சுஜித்தின் மீட்பு பணியில் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த வீரமணி தான் கண்டுபிடித்த கருவியைக் கொண்டு முயற்சித்தார். பின்னர் அந்த முயற்சியும் தோல்வியை தழுவியது.

Sujith's recovery experience by pudhukottai veeramani
புதுக்கோட்டை வீரமணி

இது குறித்து பேசிய வீரமணி, "சுஜித் கீழே விழுந்த தகவல் தெரிந்ததும் ஒரு மணி நேரத்தில் இரும்பைக் கொண்டு L வடிவ ஒரு கருவியை வடிவமைத்து அன்று இரவே நடுக்காட்டுப்பாட்டிக்கு நண்பர்களோடு விரைந்தேன். அங்கு சுகாதார துறை அமைச்சரிடம் அனுமதி பெற்று கருவியைப் பற்றி விளக்கமளித்து குழந்தையை மீட்கும் பணியில் இறங்கினோம். சுமார் ஒரு மணி நேரமாக முயற்சி செய்தோம். ஆனால், அப்போது ஆழ்துளை கிணற்றில் பார்த்த பொழுது குழந்தையின் உருவம் தெரியவில்லை. மணல் மூடி இருப்பதுபோல தெரிந்தது. அதனால் குழந்தையை மேலே தூக்குவது சிரமமாக இருந்தது" என்றார்.

சுஜித்தை மீட்க வீரமணி பயன்படுத்திய கருவி

தொடர்ந்து பேசிய அவர், "என் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவு என்றால் அதுதான். ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு குழந்தையை தூக்க முடியதாததை நினைத்து கண்கள் கலங்கி நின்றன. குழந்தையின் மீது மணல் மூடாமல் இருந்திருந்தால் நிச்சயம் நான் குழந்தையை தூக்கி இருப்பேன். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது" என்று கூறினார்.

இதையும் படியுங்க:

பெற்றோரின் அலட்சியம்: ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

Intro:Body:ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணியில் தனது கருவியுடன் களமிறங்கிய புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வீரமணி.. நடந்தது என்ன!

கடந்த மாதம் 25ஆம் தேதி மாலை 5 மணியளவில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது சிறுவன் சுர்ஜித் ஆள்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அச்சிறுவனை மீட்க பல முயற்சிகள் எடுத்தும் பலனளிக்காமல் இறுதியில் சிறுவன் 4 நாட்கள் கழித்து இறந்த பிறகு மீட்டு அடக்கம் செய்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகையே சோகத்தில் ஆழ்த்தியது. சிறுவனை மீட்கும் பணியில் கருவிகளைக் கண்டுபிடித்தார் குழுவினர் களத்தில் இறங்கினார் அதில் நான்காவதாக களமிறங்கிய புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் சேர்ந்த வீரமணி தான் கண்டுபிடித்த கருவியைக் கொண்டு சிறுவனை மீட்கும் முயற்சி செய்தார். ஆனால் அது பயனில்லாமல் வெளியேறினார்.

இது குறித்து வீரமணி தெரிவித்ததாவது,

மாலை 5 மணிக்கு சிறுவன் ஒளிந்திருக்கிறான் ஆனால் நான் பணியின் காரணமாக கவனிக்கவில்லை நண்பர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு பேசியபோது எனக்கு தகவல் தெரிந்ததும் இரவு 9 மணி இருக்கும் உடனடியாக என்ன செய்வதென்று யோசித்தேன் ஒரு மணி நேரத்தில் இரும்பைக் கொண்டு L வடிவ ஒரு கருவியை வடிவமைத்து நானும் எனது நண்பர்களும் நள்ளிரவில் நடுக்காட்டு பட்டிக்கு விரைந்தோம். விடியற்காலை 4 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்றோம்.அங்கு சுகாதார துறை அமைச்சரிடம் அனுமதி பெற்று கருவியைப் பற்றி விளக்கமளித்து குழந்தையை மீட்கும் பணியில் இறங்கினோம். சுமார் ஒரு மணி நேரமாக முயற்சி செய்தோம். நான் அங்கு சென்று ஆழ்துளை கிணற்றில் பார்த்த பொழுது குழந்தையின் உருவம் எதுவுமே தெரியவில்லை மணல் மூடி இருப்பதுபோல தெரிந்தது. அதனால் என்னுடைய கருதி குழந்தைக்கு அடியில் செல்லவில்லை. அதனால் குழந்தையை மேலே தூக்குவது சிரமமாக இருந்தது. என் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவு என்றால் அது இதுதான் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு இதனால் குழந்தையை தூக்க முடியவில்லை என்பதை நினைத்து எனது கண்கள் கலங்கி நின்றன. குழந்தையின் மீது மணல் மூடாமல் இருந்திருந்தால் நிச்சயம் நான் குழந்தையை தூக்கி இருப்பேன். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் அவள் துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற நவீன கருவிகளை தற்போது வடிவமைத்திருக்கிறேன் என்று கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.