புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (அக்.9) கரும்பு விவசாயிகள் கையில் கரும்பு ஏந்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், "மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பகுதிகளை அறிஞர் அண்ணா பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கு ஒதுக்கிட வேண்டும், அறந்தாங்கி இஐடி பாரி ஆலையிடம் ரூ. 60 கோடி கரும்புக்கான நிலுவைத் தொகையை பெற்றுத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தென்காசியில் கரும்பு விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டம்!