ETV Bharat / state

‘தமிழர்களின் வேலை தமிழர்களுக்கே’ - மாணவர்கள் போராட்டம்

புதுக்கோட்டை: அகில இந்திய மகாத்மா காந்தி சமூகப் பேரவை சார்பில் தமிழர்களுக்கான வேலையை தமிழர்களுக்கு வழங்கக் கோரி மாணவர்கள் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

"தமிழர்களுகளின் வேலை தமிழர்களுக்கே" - வெடிக்கும் போராட்டம்
author img

By

Published : Oct 19, 2019, 2:13 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழி சார்ந்த 100 கேள்விகள் இடம் பெற்றிருந்த நிலையில், தற்போதைய புதிய விதிமுறைகளின்படி டிஎன்பிஎஸ்சி முதல்நிலை தேர்வுகளில் தமிழ் மொழி சார்ந்த கேள்விகள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

அகில இந்திய மகாத்மா காந்தி சமூகப் பேரவை சார்பில் போராட்டம்

புதுக்கோட்டையில் அகில இந்திய மகாத்மா காந்தி சமூகப் பேரவை சார்பில் 300க்கும் மேற்பட்ட பட்டதாரி மாணவ மாணவிகள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழி நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் மீண்டும் தமிழ் மொழி சார்ந்த கேள்விகளைக் கேட்க வலியுறுத்தியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கான வேலையை தமிழர்களுக்கு வழங்கக்கோரியும் இதை ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் மாநிலம் முழுவதுமுள்ள மாணவர்கள் ஒன்றிணைந்து வலிமையான போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படியுங்க:

குரூப் - 2 தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக கூறுவது உண்மையில்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

Intro:தமிழகத்தின் வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு தான் கிடைக்க வேண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர்கள்..Body:

டிஎன்பிஎஸ்சி முதனிலைத் தேர்வில் தமிழ் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் தமிழருக்கான வேலை தமிழருக்கே வழங்கு வேண்டும் என்பதை வலியுறுத்தியும் புதுக்கோட்டை திலகர் திடலில் அகில இந்திய மகாத்மா காந்தி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது வருகிறது. 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழி சார்ந்த 100 கேள்விகள் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போதைய புதிய விதிமுறைகளின்படி டிஎன்பிஎஸ்சி முதல்நிலை தேர்வுகளில் தமிழ் மொழி சார்ந்த கேள்விகள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்ததோடு இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டையில் அகில இந்திய மகாத்மா காந்தி சமூக பேரவை சார்பில் 300க்கும் மேற்பட்ட பட்டதாரி மாணவ மாணவிகள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழி நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் மீண்டும் தமிழ் மொழி சார்ந்த கேள்விகளை கேட்க வலியுறுத்தியும் தமிழகத்தில் தமிழர்களுக்கான வேலையை தமிழர்களுக்கு வழங்க கோரியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்
ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் இன்று மாணவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அரசு இதனை மறுபரிசீலனை செய்யாத பட்சத்தில் ஜல்லிக்கட்டு போராட்டங்களை போன்று தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஒன்றிணைந்து வலிமையான போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கூறியுள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.