ETV Bharat / state

சாலையின் ஓரத்தில் கிடந்த கற்சிற்பங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே வாகவாசல் கிராமத்திலிருந்து பூங்குடி செல்லும் சாலையின் ஓரத்தில் அழகிய கற்சிற்பங்கள் கிடந்தன.

கற்சிற்பம்
கற்சிற்பம்
author img

By

Published : Oct 3, 2020, 7:02 PM IST

புதுக்கோட்டை: வெள்ளனூர் அருகே சாலையோர வயல்வெளியில் குவியலாக கிடந்த கற்சிற்பங்களால் பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளனூர் அருகே உள்ள வாகவாசல் கிராமத்திலிருந்து பூங்குடி செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள வயல்வெளியில் குதிரை, சிங்கம் சிற்பங்களுடன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கற் தூண்கள், தண்ணீர் குடம், பெரிய வளையம் போன்ற 29 கலைப் பொருள்களை அப்பகுதியில் கிடப்பதாக தகவல் பரவியது. இவ்வளவு கற்கலைப் பொருள்கள் எப்படி இந்த இடத்தில் கொட்டப்பட்டது, யார் கொட்டியது? என அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

கற்சிற்பம்
கற்சிற்பம்

மேலும் அதிக வேலைப்பாடுகளுடன் அழகாக வடிவமைக்கப்பட்ட கலைப் பொருள்களை ஏன்? இப்படி கொண்டு வந்து வயல்வெளியில் கொட்டினார்கள்? இந்தப் பொருள்களை வாங்கி வைத்திருந்தவர்கள் கொண்டு வந்து கொட்டினார்களா? அல்லது இது போன்ற கலைப் பொருள்களை திருட்டுத்தனமாக வாங்கி வைத்திருந்து சிலை கடத்தலில் சிக்கிக் கொள்வோம் என்று கொண்டு வந்துகொட்டினார்களா? என்ற கேள்வியும் அப்பகுதி கிராம மக்களிடம் எழுந்துள்ளது.

அதேசமயம் அருகில் கைலாசநாதர் கோயில் திருப்பணிகள் நடப்பதால் இந்த கலைப் பொருள்களை திருப்பணிக்கு பயன்படுத்துவார்கள் என்ற நோக்கத்தில் கொண்டு வந்து கொட்டி இருப்பார்களா? என்று பல வகையில் பேசப்படுகிறது.

இதனையடுத்து இதுகுறித்து வெள்ளனூர் காவல்துறையினர், வருவாய்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கன்னியாகுமரியில் கடல் திடீரென உள்வாங்கியது உண்மையா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.