ETV Bharat / state

சிவகங்கை தொல்நடைக் குழுவினர் புதுக்கோட்டையில் தொல்நடைப் பயணம்! - heritage trip

Sivaganga news: சிவகங்கை தொல்நடைக் குழுவினர் புதுக்கோட்டையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுடன் தொல்நடைப் பயணம் மேற்கொண்டனர்.

sivagangai-folklore-team-goes-folklore-tour-at-pudukkottai
சிவகங்கை தொல்நடைக் குழுவினர் புதுக்கோட்டையில் தொல்நடைப் பயணம்...
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2023, 3:36 PM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை தொல்லியல் தலங்களில் சிவகங்கை தொல்நடைக் குழுவினர் தொல்நடைப் பயணம் மேற்கொண்டனர். இதில் மாணவர்கள், பொதுமக்கள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதைனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா தெரிவித்ததாவது, “மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொல்நடைப் பயணம் மேற்கொள்ளுதல், பள்ளி கல்லூரிகளில் கருத்தரங்கு நடத்துதல், உலகப் பாரம்பரிய விழாக்களை கொண்டாடுதல், அவ்வப்போது தொல்லியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி செய்தியாக வெளியிடுதல், தொல்லியல் தலங்களுக்கு பொதுமக்களையும் மாணவர்களையும் அழைத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறது.

தற்போது சிவகங்கை தொல்நடைக்குழு, புதுக்கோட்டையில் உள்ள குடுமியான்மலை, சித்தன்னவாசல், புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம், திருமயம் ஆகிய இடங்களுக்கு தொல்நடைப் பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது குடுமியான் மலையில் உள்ள இசைக் கல்வெட்டு மற்றும் ஏழாம் நூற்றாண்டு குடைவரைக் கோவில், அங்குள்ள பாண்டியர் கால கல்வெட்டுகள், சிகா நாதர் திருக்கோயில் நாயக்கர் கால வியத்தகு கற்சிலைகள் ஆகியவற்றைக் கண்டு மகிழ்ந்தனர்.

சித்தன்னவாசலில் உள்ள 1,200 ஆண்டுகள் பழமையான குடைவரை ஓவியங்களைப் பார்த்து, அன்றைய நாளில் எளிய வண்ணங்களைக் கொண்டு இவ்வளவு சிறப்பாக வரைந்திருந்த திறனைப் பார்த்து வியந்து போயினர். புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள பறவைகள், பாம்பினங்கள், கடல் வாழ் உயிரினங்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட காட்சிக் கூடங்களை பார்த்தும், அங்குள்ள டைனோசர் அசைவு மற்றும் ஒலிக் காட்சியைக் கண்டுகளித்தனர்.

பின்னர் சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட திருமயம் மலைக்கோட்டை, கோட்டையின் இடைப்பகுதியில் அமைந்துள்ள சிவன் குடைவரை, திருமயம் மலையில் தென்பகுதியில் அமைந்துள்ள ஏழாம் நூற்றாண்டு திருமால் குடைவரைக்கோவில், சிவன் கோவில் போன்றவற்றைக் கண்டனர். மேலும், அங்குள்ள கல்வெட்டுகள் இசை சார்ந்த கல்வெட்டு லிங்கோதபவர் சிற்பம், சிவனுக்கு வாயிற்காவலராக நிற்கும் எமன் மற்றும் சித்திரகுப்தர் சிற்பங்களை பார்த்தும் மகிழ்ந்தனர்.

தொல்நடைப் பயணம் தொடங்குவதற்கு முன்பாக தொல்நடை பயணக் கையேடு வெளியிடப்பட்டது. இக்கையேட்டை தலைவர் சுந்தரராஜன், துணைத் தலைவர் முனீஸ்வரன் வெளியிட ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குனர் இளங்கோ பெற்றுக் கொண்டார்.

இந்த தொல்நடைப் பயணம் மிகுந்த மகிழ்ச்சி அளித்ததுடன் தொல்லியல் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக கலந்து கொண்டவர்கள் கூறினர். இதில் சிவகங்கை தொல்நடைக்குழுத் தலைவர் சுந்தரராஜன் செயலர் இரா.நரசிம்மன், துணைத்தலைவர் முனீஸ்வரன், ஓய்வு பெற்ற வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் உட்பட 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்” என்றார்.

இதையும் படிங்க: ரூ.15 ஆயிரம் மானியத்துடன் பம்பு செட் வாங்க விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.