ETV Bharat / state

கஞ்சா கடத்தல் வழக்கில் சரியாக தகவல் தெரிவிக்காததால் எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை: கஞ்சா கடத்தல் வழக்கில் சரியாகத் தகவல் தெரிவிக்கவில்லை எனக்கூறி காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்செய்யப்பட்டார்.

author img

By

Published : Oct 8, 2020, 5:57 PM IST

si
si

ஈரோட்டிலிருந்து புதுக்கோட்டைக்கு கடந்த மாதம் 29ஆம் தேதி காரில் சுமார் 120 கிலோ கஞ்சா கடத்திவரப்பட்டது. தகவல் அறிந்த திருக்கோகர்ணம் காவல் துறையினர் வாகன சோதனையில் காரை நிறுத்தி கஞ்சாவைப் பறிமுதல்செய்தனர்.

இதையடுத்து, அரிமளம் ஆரோக்கிய தாஸ் என்பவரை கைதுசெய்து விசாரித்தனர். இந்த வழக்கில் மேலும் ஐந்து பேர் சிக்கினர். இவர்கள் அளித்த வாக்குமூலத்தில், திருமயம் அருகே மணவாளங்கரையில் கஞ்சா பதுக்கிவைத்து வியாபாரம் செய்ததாகக் கூறியுள்ளனர்.

காவல் கண்காணிப்பாளர் நடத்திய மேல் விசாரணையில் கஞ்சா பதுக்கி வியாபாரம் செய்தது உண்மையென தெரியவந்தது.

இதையடுத்து உயர் அலுவலர்களுக்குச் சரியான தகவலைத் தெரிவிக்காததற்காக திருமயம் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஸ்டாலினை திருச்சி சரக டிஐஜி பணியிடை நீக்கம்செய்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.