புதுக்கோட்டை அருகே பல வருடங்களாக ரயில்வே கேட் இயங்கி வருகின்றது. இதனால், இந்தச் சாலை வழியாக வடக்குப்பட்டி, குரும்பட்டி, குறிஞ்சிப்பட்டி, தேக்காட்டூர், அதிரம்பட்டி என உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தினந்தோறும் அந்த சாலை வழியாக ரயில்வே கேட்டைக் கடந்து, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, நமணசமுதிரம் பகுதியிலிருந்து மாணவ மாணவிகள் அதிக அளவில் அந்த வழியாக பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர். திடீரென இன்று ரயில்வே தண்டவாளம் பணி நடைபெறுகிறது என சிறிய அளவில் விளம்பர போர்டுகளை ரயில்வே காவல் துறையினர் வைத்துவிட்டு ரயில்வே கேட்டை முற்றிலுமாக அடைத்து விட்டனர்.
இதனால் மக்கள் அவ்வழியைக் கடக்க முடியாமல் இருந்தனர். எனவே, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரயில்வே கேட் அருகே நின்று மறியலில் ஈடுபட முயற்சித்தனர். இதையறிந்த, காவல் துறையினர் மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பேசி ஒரேயடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினர்.
மேலும், திடீரென ரயில்வே துறை காவலர்கள் ரயில்வே கேட்டை அடைந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: கோவிட்-19 முன்னெச்சரிக்கை: கை கழுவும் பழக்கத்தை தொடங்குங்கள்