புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட வேளாண்மை விரிவாக்கக் கட்டிடம் இடியும் நிலையில் உள்ளது. கட்டிடம் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. இதில் 15க்கும் மேற்பட்ட அலுவலர்கள் வேலை பார்க்கின்றனர். 32 ஊராட்சிகளுக்கு இந்த அலுவலகம் பயன்பாட்டில் உள்ளது.
ஒரு நாளைக்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் எந்த நேரத்தில் கட்டிடம் இடிந்து விழும் என்ற அச்சத்துடன் அங்கு வரும் விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் அச்சத்துடன் உள்ளனர். அந்த கட்டிடத்தை சீரமைக்கும் வரை வேறு இடத்திற்கு அலுவலகத்தை மாற்றித் தருமாறு விவசாயிகள் மற்றும் அங்கு பணிபுரியும் அரசு அலுவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: இனி மெட்ரோ நிலையங்களில் வாகனங்களை சார்ஜ் செய்யலாம்!