புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள வளதாடிப்பட்டியில் சாராயம் காய்ச்சப்படுவதாக இலுப்பூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இலுப்பூர் காவல் ஆய்வாளர் ஜெயராமன் தலைமையில் காவல்துறையினர் வளதாடிப்பட்டியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வளதாடிப்பட்டி ஆத்தங்காடு என்னும் இடத்தில் சாராயம் காச்சப்படுவது தெரியவந்தது.
இதனையடுத்து, அந்த பகுதியை சுற்றி வளைத்த காவல்துறையினர் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த கனகு (55), சரோஜா (29), மீனா (45), ராமன் (35) ஆகியோரை கைது செய்தனர். பின்னர், 20லிட்டர் கொள்ளளவு கொண்ட ஏழு கேனில் இருந்த 140 லிட்டர் சாராயத்தை அழித்தனர்.
மேலும் இரண்டு பாரல்களில் இருந்த ஊரல் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த இலுப்பூர் காவல்துறையினர், நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:துக்கோட்டையில் 232 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - மாவட்ட ஆட்சியர் தகவல்!