ETV Bharat / state

இளம் பெண்ணுக்கு முக சீரமைப்பு சிகிச்சை - அரசு மருத்துவர்கள் சாதனை!

author img

By

Published : Dec 25, 2019, 5:12 PM IST

புதுக்கோட்டை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன் முறையாக முக அழகினை மேம்படுத்துவதற்காக முக சீரமைப்பு சிகிச்சையினை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளனர்.

இளம்பெண்ணுக்கு முக சீரமைப்பு சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை
இளம்பெண்ணுக்கு முக சீரமைப்பு சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை

திருச்சி மாவட்டம், புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா (19). இவருக்கு பற்கள் முன் தள்ளி இருந்த காரணத்தினால், முக அழகு குறைந்தும் உணவினை மென்று தின்பதற்கு சிரமப்பட்டும் இருந்துள்ளார். எனவே அதை ‘கிளிப்’ மூலமாக சரி செய்ய இரண்டு ஆண்டுகளாக முயற்சித்து வந்துள்ளார். அப்படியும் பற்கள் முன் தள்ளி இருந்த காரணத்தினால் மனசோர்வுற்று புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டிசம்பர் 16ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

pudukottai Government doctors record facial rejuvenation treatment for young woman
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவழுவுடன் சண்முகப்பிரியாவும் அவரது தாயாரும்

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழு அவருக்கு பற்கள் மடடுமல்லாது மேல்தாடையும் முன் தள்ளி இருந்ததை கண்டறிந்தனர். ‘எக்ஸ்ரே’ மற்றும் ‘சிடி ஸ்கேன்’ பரிசோதனைகளுக்குப் பிறகு தலைமை முக சீரமைப்பு நிபுணர் சுரேஷ்குமார், உதவி மருத்துவர் பாஸ்கர், விஜயகாந்த், திவ்யா மற்றும் மயக்கவியல் மருத்துவர் கனிமொழி ஆகியோர் அடங்கிய குழு மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து முகத்தை சீரமைத்தனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

இது பற்றி மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், "முக சீரமைப்பிற்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் தமிழ்நாடு அரசு, மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளது. அதன்மூலம் முதன் முறையாக இம்மருத்துவமனையில் முக சீரமைப்பு சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. ‘ஆர்த்தோ கினாதிக்’ அறுவை சிகிச்சை என்று சொல்லப்படும் முன்தாடை முக சீரமைப்பு சிகிச்சை சண்முகப்பிரியாவுக்கு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது முக அழகு அதிகமான காரணத்தினால் மாணவி தன்னம்பிக்கையோடு இருக்கிறார்" என்றார்.

Intro:Body:புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இளம்பெண்ணுக்கு முக சீரமைப்பு சிகிச்சை செய்து பெண்ணின் வாழ்விற்கு நம்பிக்கை அளித்த மருத்துவர்கள்.

         புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன் முறையாக முக அழகினை மேம்படுத்துவதற்காக முக சீரமைப்பு சிகிச்சையினை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி, புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய சண்முகப்பிரியா பற்கள் முன்தள்ளி இருந்த காரணத்தினால், முக அழகு குறைந்தும் உணவினை மென்று தின்பதற்க சிரமப்பட்டும் இருந்துள்ளார். எனவே அதை ‘கிளிப்’ மூலமாக சரி செய்ய இரண்டு ஆண்டுகளாக முயற்சித்து வந்துள்ளார். அப்படியும் பற்கள் முன் தள்ளி இருந்த காரணத்தினால் மனசோர்வுற்று தாழ்வு மனப்பான்;மை கொண்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டிசம்பர் 16-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
         அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழு அவருக்கு பற்கள் மடடுமல்லாது மேல்தாடையும் முன் தள்ளி இருந்ததை கண்டறிந்தனர். ‘எக்ஸ்ரே’ மற்றும் ‘சிடி ஸ்கேன’; பரிசோதனைகளுக்குப் பிறகு மறுநாளே அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
         அறுவை சிகிச்சைக்கென தலைமை முக சீரமைப்பு நிபுணர் சுரேஷ்குமார் உதவி மருத்துவர் பாஸ்கர், விஜயகாந்த் திவ்யா மற்றும் மயக்கவியல் மருத்துவர் கனிமொழி ஆகியோர் அடங்கிய குழு 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து முகத்தை சீரமைத்தனர். அறுவை சிகிச்சையில் தழும்புகள் ஏதும் முகத்தில் ஏற்படக்கூடாது என்பதற்காக மேல் உதட்டின் கீழே உள்ள ஈறு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு முன்தாடையின் 2 பக்கங்களிலும் எலும்புகள் சிறு பகுதி வெட்டி எடுக்கப்பட்டன. அதனுடன் இருந்த 2 பற்களும் அகற்றப்பட்டன. பிறகு நடுவில் உள்ள மேல் தாடை எலும்பினை உள்ளே தள்ளி 2 பக்கங்களிலும் சிறு தகடு மற்றும் ‘ஸ்க்ரூ’ மூலம் இணைத்து முகத்தை சீரமைத்தனர்.
         இது பற்றி மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்ததாவது:
         முக சீரமைப்பிற்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளது. அதன்மூலம் முதன் முறையாக இம்மருத்துவமனையில் முக சீரமைப்பு சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
         ‘ஆர்த்தோ கினாதிக்’ அறுவை சிகிச்சை என்று சொல்லப்படும் முன்தாடை முக சீரமைப்பு சிகிச்சை இவருக்கு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது முக அழகு அதிகமான காரணத்தினால் மாணவி தன்னம்பிக்கையோடு இருக்கிறார். என்று கூறினார்.
          Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.