ETV Bharat / health

சப்பாத்தி சூப்பர் சாப்டாக வர மாவை இப்படி பிசைந்து பாருங்க..அசந்து போய்ருவீங்க! - How to Make Soft Chapati at Home - HOW TO MAKE SOFT CHAPATI AT HOME

How to Make Soft Chapati at Home: மாவை எப்படி பிசைந்தாலும் சப்பாத்தி சாப்டா வரவில்லையா? சப்பாத்தி செய்த சில நிமிடங்களில் தட்டு போல மாறிவிடுகிறதா? கவலைய விடுங்கள்..ஈசியா எப்படி சப்பாத்தியை சாப்டாக செய்யலாம் என்பதை பார்ப்போம்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)
author img

By ETV Bharat Health Team

Published : Sep 29, 2024, 8:16 AM IST

ஹைதராபாத்: டிவி விளம்பரங்களில் காட்டுவது போல, வீட்டில் செய்யும் சப்பாத்தியும் சாப்டாக உப்பி வர வேண்டும் என்று தான் அனைவரும் எதிர்பார்க்கிறோம். நாமும், ஒவ்வொரு முறை சப்பாத்தி செய்யும் போது ஒரு முறையாவது சாப்டாக வந்துவிடாதா என்று முயற்சி செய்கிறோம். ஆனால், அது சாத்தியமா? என்றால் இல்லை. ஆனால், சில குறிப்புகளைப் பின்பற்றினால், சப்பாத்தி பஞ்சுப் போல மென்மையாக வரும். அது எப்படி? அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..

தேவையான பொருட்கள்:

  • கோதுமை மாவு - 2 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • தண்ணீர் - 1 கப்

சப்பாத்தி மாவு பிசைவது எப்படி?

  • ஒரு அகல பாத்திரத்தில் கோதுமை மாவை சேருங்கள்
  • பிறகு, தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்
  • இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு பிசையுங்கள்

[குறிப்பு: பொதுவாக 1 கப் மாவு என்றால் அரை கப் தண்ணீர் போதுமானதாக இருக்கும். ஆனால், சில மாவின் பதம் பொறுத்து தண்ணீர் தேவை மாறுபடுகிறது]

  • சப்பாத்தி மாவு சாப்டாக வரும் வரை 5 முதல் 7 நிமிடத்திற்கு பிசையுங்கள்
  • கைகளில் மாவு ஒட்டாமல் வரும் வரை பிசைந்ததும் ஒரு உருண்டையாக உருட்டிக் கொள்ளுங்கள்
  • இப்போது, சப்பாத்தி மாவு மீது கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து ஒரு துணியால் மூடி வைத்து விடுங்கள்
  • 15 முதல் 20 நிமிடம் மாவு ஊறிய பிறகு...உங்களுக்கு தேவையான அளவு உருண்டைகளாக பிரித்துக்கொள்ளுங்கள்
  • நீங்கள் உருட்டி வைத்துள்ள உருண்டைகளின் இருபுறமும் கோதுமை மாவை தடவிக்கொள்ளுங்கள். (இப்படி செய்வதன் மூலம் மாவு வறண்டு போகாமல் இருக்கும்)
  • இதற்கிடையில், அடுப்பில் சப்பாத்தி கல்லை வைத்து சூடாக்கவும்
  • இப்போது சப்பாத்தி உருண்டையை சமமாக தேய்த்துக்கொள்ளுங்கள்
  • பிறகு, சப்பாத்தி போடும் போது கல் நன்கு சூடாக இருக்க வேண்டும். அப்போது தான் பொசு பொசு என்று வரும்
  • 10 நொடியில் சப்பாதி நன்றாக உப்பி வைந்ததும் மறுபுறம் அதே மாறி 10 நொடி புரட்டி போடுங்கள்
  • உப்பி வரவில்லை என்றால் டிஸ்யு அல்லது ஒரு துணியால் லைட்டாக அழுத்தம் கொடுங்கள்.
  • நீங்கள் தயார் செய்து வைத்த சப்பாத்தியை ஹாட் பாக்ஸில் போட்டு மூடியை முழுவதுமாக மூடாமல் சிறிது இடைவெளி விடவும். இப்படி செய்தால் மணிக்கணக்கில் சப்பாத்தி சூப்பர் சாஃப்டாக இருக்கும்.
  • அவ்வளவு தான் சாப்டான சப்பாத்தி ரெடி..!

[குறிப்பு: உடல் எடை குறைய சப்பாத்தி சாப்பிடுபவர்கள் எண்ணெய் இல்லாமல் சுடலாம். இப்படி சுட்டாலும் மிருதுவாக இருக்கும்]

10 நொடியில் சப்பாத்தி உப்பி வந்துவிடும்
10 நொடியில் சப்பாத்தி உப்பி வந்துவிடும் (Credit - ETVBharat)

இதையும் படிங்க:

  1. இட்லி/தோசை மாவு புளித்து விட்டதா? இதை கொஞ்சம் கலந்து பாருங்க..சக்சஸ் தான்!
  2. மாவு அரைக்காமல் 'Instant' ராகி இட்லி செய்யலாமா? வெறும் 20 நிமிடம் போதும்!
  3. நீரிழிவைக் கட்டுப்படுத்தும் ஜோவர் (சோள) ரொட்டி செய்வது எப்படி?...சப்பாத்திக்கு பெஸ்ட் ஆல்டர்னேட்டிவ் இதான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.