ETV Bharat / sports

முருகப்பா ஹாக்கி இறுதிப் போட்டி: தங்கக் கோப்பையை வெல்லப்போவது யார்? - MURUGAPPA gold cup HOCKEY FINAL - MURUGAPPA GOLD CUP HOCKEY FINAL

முருகப்பா ஹாக்கி இறுதிப் போட்டியில், ரயில்வே அணியும் - ஐஓசி அணியும் மோதுகின்றன. இறுதிப் போட்டியில் வென்று கோப்பையை வெல்லப் போகும் அணி எது என பொறுத்திருந்துப் பார்க்கலாம்.

ஐஓசி அணி வீரர்கள்
ஐஓசி அணி வீரர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2024, 8:32 AM IST

சென்னை: 95வது அகில இந்திய முருகப்பா - எம்சிசி தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. நேற்று (செப்.28) நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ரயில்வே அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தியது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ராணுவ அணியை 3-2 என்ற கோல் கணக்கில் ஐஓசி அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

முதல் அரையிறுதி போட்டியில் ரயில்வே அணியும் - ஒடிசா அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கியது முதலே ரயில்வே அணி ஆதிக்கம் செலுத்தியது. இதில், ரயில்வே அணியின் ஜோகிந்தர் சிங், ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரைப் பயன்படுத்தி ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார். அதில், ரயில்வே அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. யுவராஜ் வால்மிகி 16வது நிமிடத்தில் ஃபீல்டு கோல் மூலம் அணியை 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் படுத்தினார்.

ஆட்டத்தின் 2வது பாதியில் 38வது மற்றும் 43வது நிமிடத்தில் தொடர்ச்சியாக ஜோகிந்தர் சிங் கோல் அடிக்க ரயில்வே அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இறுதி வரை போராடியும் ஒடிசா அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாததால் ஆட்ட நேர முடிவில், ரயில்வே அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : முருகப்பா ஹாக்கி போட்டி; அரை இறுதியில் மோதப்போகும் அணிகள் எவை

இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும் (ஐஓசி), இந்திய ராணுவம் - ரெட் (ஆர்மி) அணியும் மோதியது. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றும் முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியாமல் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.

மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய இரண்டாவது பாதியின் 36வது நிமிடத்தில் ஐஓசி அணி வீரர் அர்மான் குரேஷி முதல் கோல் அடித்து ஆட்டத்தை பரபரப்பாக்கினார். அவரைத் தொடர்ந்து 46வது நிமிடத்தில் ஐஓசி அணியின் சுனில் குமார் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்து அணியை 2-0 என முன்னிலைப் படுத்தினார்.

பின்னர் 47வது நிமிடத்தில் இந்திய ராணுவ அணியினர் கோல் அடித்து தங்கள் அணியை 1-2 என தங்கள் பக்கம் ஆட்டத்தை திருப்ப முயற்சித்தனர். மீண்டும் 55வது நிமிடத்தில் ஐஓசி அணியின் வீரர் பெனால்டி ஸ்ட்ரோக் மூலம் கோல் அடித்து அணியை மீண்டும் 3-1 என்ற கணக்கில் முன்னேற்றினார்.

பின்னர் 57வது நிமிடத்தில் இந்திய ராணுவ அணியின் சிரில் லூகன் மீண்டும் ஒரு கோல் அடித்து அணியை 3-2 என்ற கணக்கில் ஆட்டத்தை விறுவிறுப்பாக்கினார். ஆட்டம் முடிய 3 நிமிடங்கள் இருந்த நிலையில், இந்திய ராணுவ அணியால் எவ்வளவு முயன்றும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 3-2 என்ற கணக்கில் இந்திய ராணுவ அணியை வீழ்த்தி ஐஓசி அணி இறுதி போட்டிக்கு சென்றது. இன்று (செப்.29) நடைபெறும் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ரயில்வே அணியும் - ஐஓசி அணியும் மோதுகின்றன.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.