புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கீழக்குறிச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் பள்ளியில் கணினி அறை உள்பட வகுப்பறைகள் அனைத்தும் பூட்டிய நிலையில் இருந்துள்ளன.
இந்த நிலையில் இன்று காலை அந்தப் பள்ளியில் உள்ள கணினி அறை பூட்டு மட்டும் உடைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து ஆசிரியர்கள் சென்று பார்த்தனர்.
அப்போது அந்த அறையில் இருந்த ஆறு கணினி, ஆறு யூபிஎஸ், ஆறு மானிட்டர்கள், 22" இஞ்ச் கலர் டிவி, ஆம்பில் பார் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அன்னவாசல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.