புதுக்கோட்டை : தச்சன்குறிச்சியில் இன்று (ஜன.13) காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இந்த ஜல்லிகட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
அரசு வழிகாட்டுதலின்படி கரோனா விதிமுறைப்படி 600 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் இருந்தால் மட்டுமே களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டனர்.
தொழுவத்திலிருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். அப்போது அவர்கள் கைகளில் சிக்காமல் அவர்களுக்கு வீர விளையாட்டு காட்டி களத்தில் நின்று மாடுகள் விளையாடியதால் போட்டியில் உற்சாகம் அனல் பறந்தது.
சில விளையாட்டு காட்டிய மாடுகளை மாடுபிடி வீரர்கள் துணிச்சலோடு பிடித்து மாடுபிடி ரசிகர்களையும் பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
இதையும் படிங்க : இளைஞனின் உடற்கட்டைத் தீர்மானிப்பதே ஜல்லிக்கட்டு!