புதுக்கோட்டை மாவட்டம், செம்பாட்டூர் அருகே ராஜகுளத்தூரில் எட்வின் என்பவருக்குச் சொந்தமான கால்நடைப் பண்னை உள்ளது. இந்தப் பண்ணையில் பசுக்கள், கோழிகளை அவர் வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த திங்கள் அன்று கால்நடைப் பண்ணையின் மேற்கூரையில் தீ பற்றிக் கொண்டு மளமளவென பரவியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள் கால்நடைப் பண்ணை கொட்டகைகள் முழுவதும் எரிந்து நாசமானது.
இந்த விபத்தில் பண்ணையில் இருந்த ஆறு கன்று குட்டிகள் உடல் கருகி பலியானது. மேலும் இரண்டு பசுக்கள், இரண்டு கன்றுகள் பலத்த காயங்களுடன் மிக மோசமான நிலையில் இருப்பது காண்போருக்கு பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து வெள்ளனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வைக்கோல் லாரி மின்கம்பிகளில் உரசி தீ விபத்து!