அன்னவாசல் அருகேயுள்ள கடம்பராயன்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜும் (62), பொய்காடிப்பட்டியைச் சேர்ந்த மூக்கையாவும் (60) விவசாய தொழில் செய்து வருகின்றனர். வேலை நிமித்தமாக இருச்சக்கர வாகனத்தில் கடம்பராயன்பட்டியிலிருந்து அன்னவாசலுக்கு சென்றுள்ளனர். இருச்சக்கர வாகனத்தை கோவிந்தராஜ் ஓட்டியுள்ளார்.
இவர்களது இருச்சக்கர வாகனம் அன்னவாசல் அருகேயுள்ள தாண்டீஸ்வரம் விளக்கு அருகே வந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
![pudukkottai in annavasal tipper lorry hit bike accident case one farmer died another injured](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pdk-04-annavasal-accident-image-scr-7204435_21122019204821_2112f_1576941501_561.jpg)
இதில் மூக்கையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கோவிந்தராஜ் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மோதிய டிப்பர் லாரி சாலையோர பள்ளத்தில் சரிந்து விழுந்தது. அதையடுத்து ஓட்டுநர் சம்பவம் இடத்தைவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
![pudukkottai-in-annavasal-tipper-lorry-hit-bike-accident-case-one-farmer-died-another-injured](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5453385_dead.jpg)
மூக்கையாவின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
![pudukkottai-in-annavasal-tipper-lorry-hit-bike-accident-case-one-farmer-died-another-injured](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5453385_deadfgh.jpg)
இதையும் படியுங்க: 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் உயிரிழப்பு!