புதுக்கோட்டை : தமிழ்நாடு அரசின் புதிய திட்டமான நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை மற்றும் தூய்மை மருத்துவமனை வளாகம் திட்டத்தின் கீழ், ஏப்.27ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏப்.1ஆம் தேதி தொடங்கிய தூய்மை மாத விழாவைக் கொண்டாடும் பொருட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் நோயாளியுடன் இருப்பவர்களுக்கும் நோய் தொற்று பரவா வண்ணம் தூய்மை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையின் ஒவ்வொரு வார்டுகளிலும் கிருமிநாசினி கொண்டு மூன்று வேளையும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை அடிக்கடி தேவைப்படும் போதும் சுத்தம் செய்யப்படுகிறது. மேலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் நோயாளி உடன் இருப்பவர்களுக்கு மின்சார வசதி, தண்ணீர் வசதி மற்றும் தூய்மையான தங்குமிட வசதி ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தூய்மையைப் பேணும்படி, மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம் என்ற உயரிய நோக்கத்தைக் கருத்தில் கொண்டு அதிக அளவு மரங்களை நட்டும், குறுங்காடுகள் அமைத்தும் கண்களைக் கவரும் வகையில் அழகு பூங்காக்கள் அமைக்கப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து மேற்காணும் தூய்மை பணிகளை பார்வையிட்டார். அவருடன் மருத்துவ கல்லூரி முதல்வர் மு.பூவதி, மக்கள் தொடர்பு அதிகாரி, வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அனைவரும் உடனிருந்தனர்.
மேலும், புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேற்கோள்ளப்பட்டு வரும் இந்தத் தூய்மைப் பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் உறுதி ஏற்கப்பட்டது.
இதையும் படிங்க: நீட் மசோதாவை ஆளுநர் விரைவில் ஜனாதிபதிக்கு அனுப்புவார் - அமைச்சர் மா. சுப்ரமணியன்