கடந்த திங்கட்கிழமை (ஜன. 18) காலை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த விசைப்படகில் நாகராஜ், மெசியா, சாம், செந்தில் குமார் ஆகிய நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, இலங்கை கடற்படையின் அதிநவீன ரோந்து கப்பல் மோதியதில் நடுக்கடலில் படகு மூழ்கி மீனவர்கள் நால்வரும் மாயமாகியுள்ளனர்.
மாயமான மீனவர்களை நடுக்கடலில் சக மீனவர்கள் தேடியும் கிடைக்காததால் இன்று(ஜன. 20) மீண்டும் 3 படகுகளில் 15 மீனவர்கள் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்களை தேடி புறப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான சார்லி சார்லி, ராணி துர்கா தேவி ஆகிய இரண்டு கப்பல்களும் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதையும் படிங்க...குட்கா முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் ரமணா உள்பட 30 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்