புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று விவசாயிகள், வியாபாரிகளுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப் பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், “கரோனா பெருந்தொற்று பரவலிருந்து முழுமையாக நாம் இன்னும் விடுபடவில்லை என்பதை பொதுமக்கள் உணர்ந்து வீட்டிலேயே இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளான பால், காய்கறி, மளிகை, மருந்து உள்ளிட்டவைகள் கிடைத்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேபோல், தோட்டக்கலை பயிர்களைப் பொருத்தவரை, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐந்து ஆயிரத்து 797 ஹெக்டேர் பரப்பளவில் பழங்களும், ஆயிரத்து 523 ஹெக்டேர் பரப்பளவில் காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகின்றன.
பெரும்பாலான பயிர்கள் அறுவடைக்குத் தயாராகி வருகின்றது. ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ள நிலையில், விவசாயிகள் விளைப்பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக நேற்று விவசாயிகள், வியாபாரிகளுடனான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில், புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் உற்பத்தி செய்யும் வாழை, பலா, தர்பூசணி உள்ளிட்ட பழவகைகள், காய்கறிகளை தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலம் நேரடியாக விவசாயிகளின் விளை நிலங்களுக்கே சென்று கொள்முதல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர, விவசாயம் சார்ந்த அனைத்துவித உதவிக்கும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை 9486501681 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விவசாயிகளுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை அணுகலாம்” என்றார்.
விவசாயிகள் உதவிக்கு... புதுக்கோட்டை:
தோட்டக்கலை உதவி இயக்குநருக்கு 9600016824 என்ற எண்ணிலும், தோட்டக்கலை அலுவலருக்கு 8778623893 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
கந்தர்வக்கோட்டை:
தோட்டக்கலை உதவி இயக்குநருக்கு 9843917074, தோட்டக்கலை அலுவலருக்கு 8838430105 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
திருவரங்குளம்:
தோட்டக்கலை உதவி இயக்குநருக்கு 9585473220 என்ற அலைபேசி எண்ணிலும், தோட்டக்கலை அலுவலருக்கு 8248599765 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
அறந்தாங்கி:
தோட்டக்கலை உதவி இயக்குநருக்கு 9280989396 என்ற எண்ணிலும், தோட்டக்கலை அலுவலருக்கு 9092620627 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
கறம்பக்குடி:
தோட்டக்கலை உதவி இயக்குநருக்கு 9944213234 என்ற எண்ணிலும், தோட்டக்கலை அலுவலருக்கு 8220625670 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
குன்றாண்டார்கோவில்:
தோட்டக்கலை உதவி இயக்குநருக்கு 6383635071 என்ற எண்ணிலும், தோட்டக்கலை அலுவலருக்கு 6383635071 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
அன்னவாசல்:
தோட்டக்கலை உதவி இயக்குநருக்கு 9786882155 என்ற எண்ணிலும், தோட்டக்கலை அலுவலருக்கு 9585359447 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
விராலிமலை:
தோட்டக்கலை உதவி இயக்குநருக்கு 7904223804 என்ற எண்ணிலும், தோட்டக்கலை அலுவலருக்கு 7358939489 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
பொன்னமராவதி:
தோட்டக்கலை உதவி இயக்குநருக்கு 9578770294 என்ற எண்ணிலும், தோட்டக்கலை அலுவலருக்கு 7358939489 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
அரிமளம்:
தோட்டக்கலை உதவி இயக்குநருக்கு 9600016824 என்ற எண்ணிலும், தோட்டக்கலை அலுவலருக்கு 9092620627 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
திருமயம்:
தோட்டக்கலை உதவி இயக்குநருக்கு 9994659469 என்ற எண்ணிலும், தோட்டக்கலை அலுவலருக்கு 9976250965 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இதையும் படிங்க: 'கையில் ஒரு கடிதம்... ஸ்கூட்டரில் 1,400 கிமீ பயணம்' - ஊரடங்கில் சிக்கிய மகனை மீட்ட தாயின் அசாத்திய தைரியம்