புதுக்கோட்டை மாவட்டம், திருக்கட்டளை பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை அறிந்த அப்பகுதி மக்கள், தீயணைப்புத் துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், போதுமான தண்ணீர் கிடைக்காததால் மிகுந்த சிரமத்திற்கு பின்னரே தீ அணைக்கப்பட்டுள்ளது. இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளும் தற்போது தீயில் கருகியதால் பல லட்ச ரூபாய் சேதம் அடைந்திருப்பதாக அலுவலர்கள் கூறுகின்றனர்.
குப்பைக் கிடங்கில் தீ விபத்து - தீ விபத்து
புதுக்கோட்டை: திருக்கட்டளை நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.