ETV Bharat / state

உழவர் சந்தையில் ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேற்று (ஜூலை 19) உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

உழவர் சந்தையில் ஆட்சியர் ஆய்வு
உழவர் சந்தையில் ஆட்சியர் ஆய்வு
author img

By

Published : Jul 20, 2021, 10:55 AM IST

புதுக்கோட்டை: கடந்த திமுக ஆட்சியில் உழவர் சந்தை திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கக்கூடிய காய்கறிகளை நேரடியாக பொதுமக்களுக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் வியாபாரம் செய்து லாபம் ஈட்டுவதாகும்.

வியாபாரம் பாதிப்பு

புதுக்கோட்டை உழவர் சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையிடம் அடையாள அட்டை பெற்று நேரடியாக தாங்கள் விளைவிக்கக் கூடிய பொருள்களை பொதுமக்களுக்கு வியாபாரம் செய்து லாபம் ஈட்டி வந்தனர்.

ஆனால் தற்போது உழவர் சந்தைக்கு வெளியே வியாபாரிகள் சிலர் கடை போட்டு வியாபாரம் செய்வதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கடந்த வாரம் உழவர் சந்தையில் விற்பனை செய்து வரும் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் உறுதி அளித்திருந்தனர்.

6 உழவர் சந்தை மேம்படுத்தப்படும்

இதையடுத்து நேற்று (ஜூலை 19) உழவர் சந்தையை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

உழவர் சந்தையில் ஆட்சியர் ஆய்வு

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர், உழவர் சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை. சிலர் சந்தையின் வாசலில் கடை வைத்து வியாபாரம் செய்கின்றனர் அதனால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுகிறது என விவசாயிகள் கூறினர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆறு உழவர் சந்தைகளும் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஈரோட்டில் 60 நாள்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட உழவர் சந்தை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.