புதுக்கோட்டை மாவட்டத்தில், எதிர்வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் பொதுத் தேர்தல்கள் 2021 முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட சோதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. முந்தைய தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டிருந்தது.
தற்போது, இந்த இயந்திரங்கள் பழுதாகி உள்ளதா அல்லது முறையாக செயல்படுகிறதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது. ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் மூன்றாயிரத்து 467 வாக்குப் பதிவு இயந்திரங்கள், இரண்டாயிரத்து 88 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் இரண்டாயிரத்து 242 வாக்கினை பதிவு செய்யும் கருவிகள் உள்ளன. வாக்கு இயந்திரங்களை சரிபார்க்கும் பணியில் மின் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் என 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.