ETV Bharat / state

'நாளை 70.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தரப்படும்' - அமைச்சர் விஜயபாஸ்கர்

author img

By

Published : Jan 18, 2020, 9:06 PM IST

புதுக்கோட்டை: "நாளை தமிழ்நாடு முழுவதும் 70.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாக" சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு கடந்த 16 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக விளங்குகின்றது. போலியோவை முழுமையாக ஒழித்ததால், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்க, மத்திய சுகாதாரத்துறை முடிவெடுத்து, அதன்படி 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "மாநிலம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்கள் அமைக்கப்பட்டு 70.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இதற்காக 2 லட்சம் பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட உள்ளனர். அதுமட்டுமின்றி ரயில்வே நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 1652 மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு வரும் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

இதைத்தவிர வெளி மாநிலத் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்கள் பயனடையும் வகையில் 1000 நடமாடும் குழுக்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறையில் இறுதி நாள் என்பதால் நாளை சொட்டு மருந்து கொடுக்காமல் சில குழந்தைகள் விடுபட்டால் அடுத்த இரண்டு நாட்களுக்கு வீடு தேடி மருந்து வழங்க மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

மேலும், "சீனாவில் கொரனோ வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளதையடுத்து சீனாவில் இருந்து தமிழ்நாடு வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட இது போன்ற தடுப்பு நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கையாகத் திகழ்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு உள்ளிட்ட நோய்த் தொற்றின் தாக்கம் குறைந்ததற்கு சுகாதாரத் துறை மேற்கொண்ட தடுப்பு மற்றும் கூட்டு முயற்சியே காரணம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:

'பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடத்தவேண்டும்' - மு.க. ஸ்டாலின்

Intro:நாளை தமிழகம் முழுவது 70.50 லட்சம் குழந்தைகளுக்கு போலீயோ சொட்டுமருந்து வழங்கப்பட உள்ளது.

புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.Body:சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது,

தமிழகம் கடந்த 16 ஆண்டுகளாக போலீயோ இல்லாத மாநிலமாக விளங்குகின்றது,
இந்தியாவில் 9 ஆண்டுகளாக போலியோ நோயின் பாதிப்பு இல்லை.
போலீயோவை முழுமையாக ஒழித்ததால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்க மத்திய சுகாதாரத்துறை முடிவெடுத்து அதன்படி 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
நாளை தமிழகம் முழுவது 70.50 லட்சம் குழந்தைகளுக்கு போலீயோ சொட்டுமருந்து வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 43,ஆயிரத்து 51 மையங்கள் அமைக்கபட்டு உள்ளது. 2 லட்சம பணியாளர் களப் பணியில் ஈடுபட உள்ளனர்.
அதுமட்டுமின்றி ரயில்வே நிலையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 1652 மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு வரும் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
இதைத்தவிர வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்டவர்கள் பயனடையும் வகையில் 1000 நடமாடும் குழுக்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறையில் இறுதி நாள் என்பதால் நாளை சொட்டு மருந்து கொடுக்காமல் சில குழந்தைகளுக்கு
விடுபட்டால அடுத்த இரண்டு நாட்களுக்கு வீடு தேடி மருந்து வழங்க மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் இருந்து கொரனோ வைரஸ் பரபி யுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதையடுத்து சீனாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை ஏற்பட்டுள்ளது எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்ற மாநிலங்களை விட இது போன்ற தடுப்பு நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கையாக திகழும்.ஏற்கனவே நிபா வைரஸின் தாக்கம் மற்ற மாநிலங்களில் இருந்த போதிலும் தமிழகத்தில் அது போன்ற பாதிப்புகள் இல்லை. அதேபோல சீனாவில் இருந்து பரவும் கொரனோ வைரஸின் பாதிப்பு தமிழகத்தில் இருக்காது.கடந்த ஆண்ட விட இந்த ஆண்டு டெங்கு உள்ளிட்ட நோய்த் தொற்றின் தாக்கம் தமிழகத்தில் குறைந்ததற்கு தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறை மேற்கொண்ட தடுப்பு மற்றும் கூட்டு முயற்சியே காரணம் என்று தெரிவித்தார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.