ETV Bharat / state

'பாத்ரூம் கழுவுற வேல கொடுத்தாக்கூட போதும்... குடும்பத்தக் கரை சேத்துருவேன்' - கண்ணீருடன் கதறும் பெண்ணின் உருக்கமான கதை - மாற்றுத் திறனாளிகளின் தங்கை

"எனக்கு அரசு பாத்ரூம் கழுவும் வேலையைக் கொடுத்தால் கூட நான் செய்யத் தயாரக உள்ளேன். ஒரு நாளைக்கு 100 ரூபாய் கிடைத்தால் கூட எனக்குப் போதும். குடும்பத்தின் பசியை ஆற்றிவிடுவேன்"

மாற்றுத்திறனாளிகளின் தங்கை
மாற்றுத்திறனாளிகளின் தங்கை
author img

By

Published : May 5, 2020, 3:42 PM IST

Updated : May 5, 2020, 7:13 PM IST

இன்றையச் சூழலில் ஒரு குடும்பத்தில் ஏதேனும் ஒரு நபருக்கு உடலில் குறைபாடு இருந்தாலே பெறும் கஷ்டம். அதிலும் அவர்கள் வறுமையில் இருந்தால், சொல்லவே வேண்டாம், அவர்களைவிட கஷ்டப்படும் நபரை நாம் பார்த்திருக்கவே முடியாது. இதனை நாம் இயல்பாக அனைத்து இடங்களிலும் பார்க்கிறோம்.

ஆனால் ஒரே குடும்பத்தில் அனைவரும் மாற்றுத்திறனாளிகளாகவும், அதுவும் ஒருவேளை சாப்பாடுக்கு இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.... அப்படி ஒரு குடும்பம் இருக்கிறது. அக்குடும்பத்தைச் சந்திக்க புதுக்கோட்டை மாவட்டம், காந்திநகர் ஆறாம் வீதிக்கு சென்றோம்.

அந்தச் சிறிய குருவிக்கூட்டுக்குள், 10 குருவிகள் வாழ்வது போன்ற எண்ணம் தோன்றியது, அவர்களின் வீட்டை பார்க்கையில். நான்கு பேர் காலை சுருட்டிக்கொண்டு படுத்து, தூங்கும் அளவிற்கு குடிசை. அதில் மழைநீர் ஒழுகாமல் இருக்க படுதா விரிக்கப்பட்ட சிறியக் குடிசை வீடு.

அந்த வீட்டில் ராஜு (77) என்ற முதியவர், அவரது மனைவி வசந்தாவும், தனது பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்த ராஜூவுக்கு, முதுகுத்தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், நடக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரது மனைவி வசந்தாவுக்கும் (70) சர்க்கரை, ரத்த அழுத்தத்தினால் உடல்நலம் குன்றிப் போனார்.

இவர்களுக்கு ஐந்து மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். அந்த ஐந்து மகள்களில், முன்று பேருக்கு காது கேட்காத, வாய் பேச முடியாமல் உள்ளனர். மற்றொரு மகள் வாய் பேச முடியும், ஆனால் காது கேட்காத மாற்றுத் திறனாளியாக உள்ளார். அதேபோல் இரண்டு மகன்களுக்கும் வாய் பேசவும், காது கேட்காமலும் உள்ளனர்.

கடைசியாக பிறந்த தனலட்சுமிக்கு (28) மட்டும் எந்தக் குறைபாடும் இன்றி இருக்கிறார். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழலுக்கு சென்றதால், பத்தாம் வகுப்புடன் தனது மேற்படிப்பை விட்டுவிட்டு, வீட்டு வேலைக்குச்சென்றுள்ளார். அக்கம், பக்கம் உள்ள வீடுகளில் பாத்திரம் விளக்குவது, சமைப்பது, துணி துவைப்பது போன்ற வேலைகள் செய்து, மாதம் 2000 ரூபாய் சம்பதித்து, தனது குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.

கண்ணீருடன் கதறும் பெண்ணின் உருக்கமான கதை

குடும்பத்தில் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் வறுமையில் வாடும் இந்த குடும்பத்தினரிடம் ஒற்றுமைக்கும், அன்புக்கும் பஞ்சமே இல்லை. சிறிய பிஸ்கட் துண்டு கிடைத்தால் கூட 9 பாதியாக உடைத்து பங்கிட்டு சாப்பிடும் அளவிற்கு பாசத்தைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

வறுமையால் குடும்பத்தில் அனைவருக்கும் விஷம் கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதா? வேண்டாம் எப்படியாவது கஷ்டப்பட்டு குடும்பத்திற்கு மூன்று வேளை உணவையாவது கொடுத்துவிட வேண்டும் என்ற ஏக்கத்துடனும் இருக்கும் தனலட்சுமியிடம் பேசத் தொடங்கினோம்.

’எனக்கு வசதியாக வாழ வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. எனது குடும்பத்திற்கு மூன்று வேளை சாப்பிடுவதற்கு கஞ்சிக்கு வழி செய்து கொடுத்து பார்த்துக்கொள்ள வேண்டும், என்பதுதான் எனது ஆசை. காது கேட்காத வாய், பேச முடியாத அக்காக்கள், அண்ணன்களை வைத்துக்கொண்டு நான் மிகவும் சிரமப்படுகிறேன்.

வெளியே அனுப்பினால் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து விடுகிறது. அதனால் தான் பத்து பாத்திரம் தேய்த்து இந்தக் குடும்பத்தை காப்பாற்றி கொண்டு இருந்தேன். ஆனால் ஊரடங்கு அறிவித்ததால் வேலைக்குச் செல்ல முடியாமல், ஒரு மாத காலமாக சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சிரமப்படுகிறோம்.

இதனால் மனமுடைந்து எனது அக்கா பிச்சை எடுக்கச் சென்றார். இரு அண்ணன்களுக்கு காது கேட்காது, வாய் பேச முடியாது, அதிலும் ஒருவருக்கு கண்களும் தெரியாது. இந்த உலகத்தில் என் அளவிற்கு பிரச்னை யாருக்கேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால், என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது. எனக்கு அரசு ஏதேனும் பாத்ரூம் கழுவும் வேலையைக் கொடுத்தால்கூட நான் செய்யத் தயாரக உள்ளேன். ஒருநாளைக்கு 100 ரூபாய் கிடைத்தால் கூட எனக்கு போதும்.

ஏற்கனவே நாங்கள் வசித்துவந்த குடிசை வீடு, கஜாபுயலால் சேதமாகியதால், தற்போது படுதா விரித்து, அதற்குள் 9 பேரும் வசித்து வருகிறோம். மாற்றுத்திறனாளிகளாக இருப்பவர்களுக்கு வைத்தியம் பார்ப்பதற்கும் கூட வசதி இல்லை. இதுவரை அரசு மருத்துவமனையில் பார்த்தவரை சரிசெய்ய முடியாது என்று கூறிவிட்டார்கள்.

என் உடம்பில் உள்ள சக்தியை வைத்து இத்தனை வருடமாக வீட்டு வேலை செய்து என் குடும்பத்திற்கு சாப்பாடு போட்டு வருகிறேன். இதற்கு மேலும் என்னால் முடியவில்லை என்றால், அனைவருக்கும் விஷம் கொடுத்துவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் பிறந்துவிட்டோம், இவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் என்னை இன்னும் வாழ வைக்கிறது’ என்று கண்ணீர் விட்டு கதறினார் தனலட்சுமி.

தொடர்ந்து பேசிய தாயார் வசந்தி, ‘ஏதோ எங்களது பரம்பரையில் வாய் பேச முடியாத பெண்ணை கிணற்றில் தள்ளி விட்டார்களாம். அந்த பாவம் தான் இப்படி எங்களது குடும்பத்தை ஆட்டுகிறது என்று முன்னோர் ஒருவர் சொன்னார். பிள்ளைகள் மாற்றுத்திறனாளிகளாக இருக்கிறார்கள் என்பது கூட தெரியாமல், அடுத்தடுத்து பிள்ளைகளை பெற்று விட்டோம். அதனால் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் நிற்கிறோம்.

எனது கடைசி மகள் தனலட்சுமி தான் வீட்டு வேலைக்குச் சென்று, குறைந்தளவு பணம் தருவாள். அதை வைத்து குடும்பத்தை ஓட்டிவந்தோம். ரேஷன் கடையில் கிடைக்கும் பொருட்கள் கூட, 15 நாட்களில் தீர்ந்துவிடும். தமிழ்நாடு அரசு எங்களுக்கு ஏதேனும் உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, என் மகளுக்கு ஏதேனும் வேலை கொடுத்தால் நன்றாக இருக்கும்” என்று கண்ணீர் மல்க பேசினார் வசந்தி.

Last Updated : May 5, 2020, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.