புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் செய்யும் ஒன்றிய அரசையும், மோடியையும் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கீரமங்கலத்தில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
இதில், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். மேலும், விவசாய சங்க தேசிய குழு உறுப்பினர் மு மாதவன் தொடங்கிவைத்தார்.
போராட்டத்தில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் எஸ்.சி சோமையா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் ஏ. ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் த. செங்கோடன், க. சுந்தர்ராஜன், ஆர். முருகானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.