ETV Bharat / state

மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரர்கள் கடித்ததில் 11 பேர் காயம்

புதுக்கோட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரர்கள் கடித்ததில் நகை அடகு கடை உரிமையாளர் உட்பட 11 பேர் காயமடைந்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரர்கள் கடித்ததில் 11 பேர் காயம்
மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரர்கள் கடித்ததில் 11 பேர் காயம்
author img

By

Published : Nov 29, 2022, 9:50 AM IST

புதுக்கோட்டை: பொன்னமராவதி இந்திரா நகரை சேர்ந்தவர்கள் அய்யாசாமி (27), ‌ஆறுமுகம் (25). சகோதரர்களான இவர்கள் மனநலம் பாதிப்புக்கு மருந்து, மாத்திரை உட்கொண்டு வருவதாக தெரிகிறது.

பொன்னமராவதி பெரியார் நகரில் லட்சுமணன் என்பவர் நடத்தி வரும் நகை அடகு கடைக்கு, இருவரும் 5,000 ரூபாய்க்கு அடகு வைத்த 4 கிராம் நகையை மீட்பதற்காக நேற்று (நவ. 28) இரவு சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம் இரவு ஆகிவிட்டதால் நகையை நாளைக்கு மீட்க வருமாறு லட்சுமணன் கூறியுள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரர்கள் கடித்ததில் 11 பேர் காயம்

ஆனால் இருவரும் நகையை உடனடியாக மீட்க வேண்டும் என்று கூறி லட்சுமணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென லட்சுமணனை இருவரும் சேர்ந்து கடித்துள்ளனர். இதில் லட்சுமணன் சிறுகாயமடைந்த நிலையில், அருகே இருந்த 10 பேர் இருவரையும் தடுத்துள்ளனர்.

இதையடுத்து காது, விரல், முதுகு உள்ளிட்டவற்றில் இருவரும் கடித்ததில், ஆறு பேர் லேசான காயமும், நான்கு பேர் படுகாயமும் அடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட இருவரையும் பொன்னமராவதி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இருவர் கடித்ததில் படுகாயமடைந்த சாகுல் ஹமீது, ராஜேந்திரன், சரவணன், இளவரசன் ஆகிய நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் வீடு திரும்பினர். இது குறித்து பொன்னமராவதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கனமழை எதிரொலி: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.