கரோனா நோய்க்க் கிருமியின் அச்சுறுத்தலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே மூன்றாம் தேதிவரை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் மட்டும் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியில் அளவுக்கதிகமான பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடல்பருமன் அதிகரிக்கிறதா? - வீட்டிலிருந்தே செய்யக்கூடிய எளிமையான உடற்பயிற்சிகள்!
ஒவ்வொரு கடைகயிலும் பொருள்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நின்றதால், தகவலறிந்த கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, தாசில்தார் முருகப்பன் விரைந்து வந்து ஒலிப்பெருக்கி மூலமாகவும், ஒவ்வொரு கடையிலும் உரிமையாளர்களிடம் சமூக இடைவெளி விட்டு நிற்க வைக்காமல் வியாபாரம் செய்தால் கடைக்கு சீல் வைத்து விடுவோம் என எச்சரித்தனர்.
இதனையடுத்து வங்கியில் நின்ற பொதுமக்களிடம் சமூக இடைவெளி விட்டு நிற்க வைக்குமாறு வங்கி மேலாளரிடம் அறிவுறுத்தினார். இதனால் தெற்கு ராஜவீதி பரபரப்பாகக் காணப்பட்டது.