ETV Bharat / state

புதுக்கோட்டை மாவட்டத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்! - பொதுமக்கள் கண்ணீர்

புதுக்கோட்டை: "பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருவதாகவும், தண்ணீர் பிரச்னையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புதுக்கோட்டை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்
author img

By

Published : May 4, 2019, 3:42 AM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. தினமும் பல கிலோமீட்டர் நடந்து சென்று தண்ணீர் எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் தண்ணீர் இல்லாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அப்படியே தண்ணீர் வந்தாலும் மாதத்திற்கு இருமுறை மட்டுமே தண்ணீர் வருகிறது. போர் போட்டாலும் தண்ணீர் வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஒரு லோடு உப்பை கொட்டியதுபோல் வருகிறது. இதனால் கிட்னி கோளாறு ஏற்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

பணம் இருப்பவர்கள் ரூ.40 கொடுத்து மினரல் வாட்டர் வாங்கி பயன்படுத்துகின்றனர். தினக்கூலி வேலை செய்யும் நாங்கள் என்ன செய்வது? எத்தனையோ முறை மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், முதலில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும். தற்போது வெயில் காலம் என்பதால் தண்ணீர் பஞ்சம் உச்ச கட்டத்தில் இருக்கிறது.

வெளியூரிலிருந்து டெம்போ வேன் மூலம் தண்ணீர் கொண்டு வருகிறார்கள். அதிலும் ஒரு குடம் ஏழு ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். தண்ணீர் பிரச்னைக்கு உரிய நடவடிக்கையை அரசு விரைவில் எடுக்க வேண்டும், இல்லை என்றால் புதுக்கோட்டை மக்களாகிய நாங்கள் தற்கொலை செய்து கொண்டு சாக வேண்டியதுதான்" என்று கண்ணீருடன் கவலை தெரிவிக்கின்றனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.