தமிழ்நாட்டில் பணிபுரிந்த குடிபெயர்ந்த பணியாளர்கள் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் பயணம் செய்த மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை அந்தந்த மாவட்ட நிர்வாகம் வழங்கி இருந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்; 3,064 பேர் பணி செய்து வந்தார்கள். அதில் 21 மாநிலங்களைச் சேர்ந்த 1,800 நபர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பி செல்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 33 தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு திரும்ப விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையில் இவர்களை திருச்சி அழைத்து சென்று, ரயில் மூலம் ராஜஸ்தான் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சியிலிருந்து உத்தரப் பிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ராஜஸ்தானுக்கு சிறப்பு ரயில் நேற்றிரவு(மே 22) இயக்கப்பட்டது. இதில் ஏற்கனவே திருச்சியில் பதிவு செய்திருந்த 30 பேர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த 713 பேர் சிறப்பு ரயில் மூலம் ராஜஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் 1456 நபர்கள், தருமபுரி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 42 நபர் என மொத்தம் 1498 நபர்கள் அவர்களது சொந்த மாநிலமான ஒரிசா மாநிலத்திற்கு ஓசூர் ரயில் நிலையத்திலிருந்து நேற்று அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: இறந்தவரின் உடலில் கரோனா பரிசோதனை! - விவரிக்கும் டாக்டர் சுதிர் குப்தா