புதுக்கோட்டை: ஆலங்குடியில் நடந்த கொலை, போலீஸ் குவிப்பு அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குடி பாரதி நகரைச்சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் செல்ல கணபதி என்ற விஜய் (21). இவர் வைக்கோல் வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் செல்ல கணபதி கோஷ்டி மோதலில் சனிக்கிழமை (ஆக.28) நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டப்பட்டார்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த செல்ல கணபதியை மீட்டு அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு செல்ல கணபதியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.
இச்சம்பவம் குறித்து ஆலங்குடி டிஎஸ்பி வடிவேல் மற்றும் காவல் ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி ஆகியோர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: விசித்திரமான வழக்கு: 17 வயது சிறுவனை திருமணம் செய்த 19 வயது இளம்பெண் மீது போக்சோ