புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் அதிகளவில் வட மாநிலத்தவர்கள் எலக்ட்ரிக், ஹார்டுவேர்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை நடத்திவருகின்றனர். இந்நிலையில், அங்கு மேல ராஜ வீதியில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்களின் கடைகளுக்கு நேற்றிரவு தமிழக தேசிய கட்சியினர் பூட்டு போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், அவர்கள் வெளிமாநிலத்வர்களை எதிர்த்து துண்டு பிரசுரங்களையும் கடைகளில் ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தவலறிந்த நகர காவல்துறையினர், கடைகளுக்கு பூட்டுப் போட்டவர்களை பற்றி விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவிவருகிறது.
இதையும் படிங்க: வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சித்த பீகார் இளைஞர் - பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!