பாஜக மாநிலத் துணைத் தலைவராக இருந்த பிடி. அரசகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். தற்போது அவருக்கு திமுக தலைமை செய்தித் தொடர்புச் செயலாளர் பதவி கொடுத்துள்ளது.
அவரது சொந்த மாவட்டமான புதுக்கோட்டைக்கு வந்த அவர், திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அவர், "வரும் 2021 தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார். அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளபோது, தங்களுடைய சுய நலனுக்காக இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கட்சிப் பதவியை ஒப்பந்த முறையில் எடுத்துள்ளனர். இவர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை" என்றார்.
தொடர்ந்து அவரிடம், மாற்றுக்கட்சியில் இருந்து வரும் நபர்களுக்கு திமுகவில் முக்கிய பதவிகள் கொடுக்கப்பட்டு வருவதால் அக்கட்சி நிர்வாகிகள் அதிருப்தி அடைவது குறித்து எழுப்பிய கேள்விக்கு, திறமைகளை பொறுத்துதான் திமுகவில் பதவிகள் வழங்கப்படும் எனப் பதிலளித்தார்.
நடிகை குஷ்பூ பாஜகவில் இணைவது குறித்து, குஷ்பூ குறித்து பொதுமக்கள் மத்தியில் என்ன பெயர் இருக்கிறது என நான் சொல்லவில்லை. பொது மக்களுக்கு நன்றாக தெரியும். அவர் பாஜகவில் இணைந்தாலும் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக ஸ்டாலின் ஆவதை தடுத்து நிறுத்த முடியாது.
தொடர்ந்து, தான் பாஜகவிலிருந்து திமுகவிற்கு வந்துளாதாகக் கூறுவது தவறு. தன்னுடைய தாய் வீடு திமுக என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஸ்டாலினுடனான கூட்டத்தில் தரையில் அமர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் - வைரலாகும் புகைப்படம்!