புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அருண் சக்தி குமார் மத்திய அரசின் உள்துறை பணிக்கு மாறுதல் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன் புதிய எஸ்பியாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து புதுக்கோட்டை புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பாலாஜி சரவணன் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக அவர் அலுவலகத்திற்கு வந்த போது காவல்துறையினர் அவருக்கு காவலர் அணிவகுப்பு நடத்தினர். அதை அவர் ஏற்றுக் கொண்ட பின்னர் அலுவலத்திற்கு சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் முக்கியப் பொறுப்புகள் அனைத்திலும் பெண்கள்: இப்போது எஸ்பியும் பெண்!