ETV Bharat / state

பாஜகவின் கைப்பாவையாக மாறிய வருமான வரித்துறை- முத்தரசன்

புதுக்கோட்டை: வருமான வரித்துறை பாஜகவின் ஓர் அமைப்பாக உள்ள சங்பரிவார அமைப்பு போன்று செயல்படுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.

mutharasan-press-meet-in-pudukottai
mutharasan-press-meet-in-pudukottai
author img

By

Published : Apr 1, 2021, 10:21 PM IST

புதுக்கோட்டை சட்டபேரவை தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் முத்து ராஜாவை ஆதரித்து புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பரப்புரை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகி விட்டனர். திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சராக வருவது உறுதி.

வருமான வரித்துறை என்பது தன்னிச்சையான அமைப்பு. ஆனால் தற்போது அது பாஜகவின் கைப்பாவையாக மாறி விட்டது. குறிப்பாக வருமான வரித்துறை பாஜகவின் ஓர் அமைப்பாக உள்ள சங்பரிவார் அமைப்பு போன்று செயல்படுகிறது. பாஜக அதிமுக கூட்டணி பண பலத்தை நம்பியே தேர்தலில் இருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்- முத்தரசன்

அரசு அலுவலர்கள் துணையோடு பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் இரவு நேரங்களில் மின்சாரத்தை நிறுத்தி விட்டு பணப்பட்டுவாடா நடைபெறும் புகார்கள் வந்துள்ளன. இதைத் தடுத்த நிறுத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றவில்லை'- திமுக எம்பி செந்தில்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.