ETV Bharat / state

குற்றவாளியை கைது செய்யக் கோரி அறந்தாங்கி நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - pudhukottai news

புதுக்கோட்டை: திருத்துறைப்பூண்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலத்தை தாக்கிய நபரைக் கைது செய்யக்கோரி அறந்தாங்கி நகராட்சி அலுவலக வளாகத்தில், அலுவலக பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குற்றவாளியை கைது செய்யக் கோரி அறந்தாங்கி நகராட்சி வளாகத்தில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்

author img

By

Published : May 11, 2020, 10:04 PM IST

Updated : May 11, 2020, 10:30 PM IST

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக வெங்கடாசலம் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் அப்பகுதியில் தினசரி காய்கறி சந்தையினை இடமாற்றம் செய்த இடத்தில், மீன் விற்பனை செய்து வந்த ஒருவரைத் தட்டிக் கேட்டார். அப்போது மீன் வியாபாரி, சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலத்தை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கி நகராட்சி வளாகத்தில், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்து கணேசன் தலைமையில் அறந்தாங்கி சுகாதார ஆய்வாளர் சேகர், நகராட்சி அலுவலர்கள் அன்பழகன், சுப்பிரமணியன், ஆத்மநாதன், மதியழகன், சக்தி உள்ளிட்டோர் வெங்கடாசலம் மீது தாக்குதல் நடத்திய கல்விபிரியனை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தங்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்கக்கோரியும் நகராட்சி அலுவலக பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: ஊரடங்குத் தளர்வும் கொடைக்கானலும்: 'கடைகள் இருக்கு... வாங்கிச் சாப்பிட ஆள் இல்லை!'

Last Updated : May 11, 2020, 10:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.