ETV Bharat / state

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக் கூட்டம்: திருநாவுக்கரசர், ஜோதிமணி பங்கேற்பு - mp thirunavukarasar

புதுக்கோட்டை: ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினர்கள் திருநாவுக்கரசர், ஜோதிமணி ஆகியோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம்  திருச்சி மக்களவை உறுப்பினர்  திருநாவுக்கரசர்  ஜோதிமணி  jothimani  congress thirunavukarasar  mp thirunavukarasar  mp jothimani
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம்
author img

By

Published : Jan 30, 2020, 7:35 AM IST

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் ஆட்சியர் கண்காணிப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி முன்னிலை வகிக்க, திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமை வகித்தார்.

கூட்டம் முடிந்து பேசிய திருநாவுக்கரசர், "பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திவருகிறது. அவ்வாறு செயல்படுத்தப்பட்டுவரும் திட்டப்பணிகளில் பணிகள் நடைபெற்ற விவரம், முடிவுற்றப் பணிகள், நடைபெறவுள்ள பணிகள், திட்டப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டத் தொகை, செலவு விவரம், எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டப்பணிகள், அதற்குப் பெற வேண்டிய நிதிஒதுக்கீடு போன்ற பல்வேறு தகவல்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வுசெய்யப்பட்டது.

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக் கூட்டம்

மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக இளைஞர் வேலைவாய்ப்புத் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், தேசிய சமூகப் பாதுகாப்புத் திட்டம், பிரதம மந்திரி நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளுக்கான குடியிருப்புத் திட்டம் உள்ளிட்ட 44 திட்டப்பணிகளின் பணி முன்னேற்றம் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நேரடியாகக் கேட்டறிந்து ஆய்வுசெய்யப்பட்டது.

இந்த ஆய்வின்போது அரசு செயல்படுத்திவரும் திட்டங்கள் தகுதியுள்ள பயனாளிகளுக்குச் சென்றுசேருவதை அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும். அரசின் திட்டப்பணிகள் முறையாக நடைபெறுவதை கண்காணித்து உறுதிசெய்வதுடன் பொதுமக்களின் தேவைக்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று புதிய திட்டங்கள் நிறைவேற்றுவதற்கும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்பொழுது நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: ஈழம் காக்க ஈகம் செய்த முத்துக்குமாரின் நினைவு நாள் இன்று

Intro:மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசர் மற்றும் ஜோதிமணி பங்கேற்பு.Body:புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் ஆட்சித்தலைவர் கண்காணிப்புக் குழுக்கூட்டம் உமாமகேஸ்வரி முன்னிலையில், திருநாவுக்கரசர் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற மாவட்ட அவர்கள் உறுப்பினர் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார், ஆகியோர் உடனிருந்தனர். இக்கூட்டத்திற்குபின் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததாவது. பொது மக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளில் பணிகள் நடைபெற்ற விபரம், முடிவுற்ற பணிகள், நடைபெற உள்ள பணிகள், திட்டப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை, செலவு விபரம், எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டப்பணிகள் மற்றும் அதற்கு பெற வேண்டிய நிதிஒதுக்கீடு போன்ற பல்வேறு தகவல்கள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக இளைஞர் வேலைவாய்ப்புத் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், தேசிய சமூகப்பாதுகாப்புத் திட்டம், பிரதம மந்திரி நகர்புற மற்றும் ஊரக பகுதிகளுக்கான குடியிருப்புத் திட்டம் உள்ளிட்ட 44 திட்டப்பணிகளின் பணி முன்னேற்றம் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நேரடியாக கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது பொது மக்களின் முன்னேற்றத்திற்காக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் தகுதியுள்ள பயனாளிகளுக்கு சென்று சேருவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். அரசின் திட்டப்பணிகள் முறையாக நடைபெறுவதை கண்காணித்து உறுதி செய்வதுடன் பொது மக்களின் தேவைக்கேற்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. திட்டங்களை செயல்படுத்தவும் இதே போன்று புதிய திட்டங்கள் நிறைவேற்றுவதற்கும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்பொழுது நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை விரைவாக முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.