ETV Bharat / state

தனியார் கல்குவாரிக்கு எதிர்ப்பு.. முதல்வருக்கு கடிதம் அனுப்பி நூதன போராட்டம்! - முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மெய்யபுரம் கிராமத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இயங்கி வரும் தனியார் கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி அக்கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி பொதுமக்கள் நூதன போராட்டம்

author img

By

Published : Dec 13, 2022, 10:27 AM IST

முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி பொதுமக்கள் நூதன போராட்டம்

புதுக்கோட்டை:திருமயம் தாலுகாவுக்கு உட்பட்ட காட்டுப்பாவா பள்ளிவாசல் ஊராட்சியில் உள்ள மெய்யபுரம் கிராமத்தில் தனியார் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியின் அருகே 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், ஆலயங்கள், மற்றும் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.

இந்த கல்குவாரியில் விதிமுறைகளை மீறி அதிக மருந்து கொண்டு வெடிகளை வைத்து பாறைகளை வெட்டி எடுப்பதும் தொடர்ந்து இரவு பகல் பாராமல் வெடி வைப்பதால், இதனால் அருகே வீடுகள் ஆலயங்கள் பள்ளிக்கூடங்கள் என அதிர்வுகள் ஏற்பட்டு விரிசல்கள் ஏற்படுகிறது.

மேலும் வெடி வெடிப்பதில் அந்த மருந்துகளின் புகைகள் ஊருக்குள் காற்றோடு கலப்பதினால் மாசு ஏற்படுவதாகவும் அதைச் சுவாசிக்கிற பொதுமக்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் பல்வேறு வியாதிகள் பரவுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் அருகே உள்ள குளத்தில் மாசு கலந்து தண்ணீரை ஆடு மாடுகள் குடிப்பதால் கால்நடைகளும் இறந்து போவதாகவும், இதுபோன்று பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இயங்கி வரும் இந்த கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி பலமுறை பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள அந்த கல்குவாரியை மூடுவதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டைத் தலைமை தபால் நிலையத்தில் 250க்கும் மேற்பட்ட தபால்களை முதலமைச்சருக்கு அனுப்பும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: உயிரற்ற கணவரின் உடலைப் பார்த்ததும் மனைவியும் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.