ETV Bharat / state

பொதுமக்கள் காய்ச்சிய நீரை மட்டுமே பருக வேண்டும் - விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: கடந்த இரண்டு நாட்களாக புதுக்கோட்டையில் தொடர் கனமழையால் பல குளங்கள் நிரம்பி வழிகிறது இதனை இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

vijayabasker
vijayabasker
author img

By

Published : Dec 2, 2019, 7:47 AM IST

அப்போது பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த விஜயபாஸ்கர், தமிழ்நாடு முழுவதும் தற்பொழுது நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் பெய்யும் மழையை எதிர் கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்போது பெய்து வரும் கனமழையால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு புயல் ஏதும் இல்லாத சூழ்நிலையில் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள இந்த அடப்பன் குளம் நிரம்பியுள்ளது. இந்த குளம் நீர்நிலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் மதகுகள் மற்றும் தடுப்பணைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் இக்குளம் நிரம்பி இப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மழைநீர் வழிந்தோடும் நிலையை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுப்பணித்துறை குளங்களிலும் தேவையான மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டும், கரைகள் பலப்படுத்தப்பட்டும், எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் தேவையான நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் முழுமையான தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கனமழை பெய்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் எவ்வித நோய் தொற்றும் இல்லாத நிலை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கனமழையிலும் எவ்வித நோய் தொற்றும் இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பத்திரிக்கையாளரை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்

பொதுமக்கள் மழைகாலங்களில் நோய் தொற்றை தடுக்கும் வகையில் காய்ச்சிய நீரை மட்டுமே பருகவேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் போன்றவற்றில் காய்ச்சல், இருமல், சளி போன்ற அனைத்து நோய்களுக்கும் தேவையான நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகளும் கையிருப்பு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Intro:கடந்த இரண்டு நாட்களாக புதுக்கோட்டையில் தொடர் கனமழையால் பல குளங்கள் நிரம்பி வழிகிறது இதனை இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.Body:

அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.,

தமிழகம் முழுவதும் தற்பொழுது நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் பெய்யக் கூடிய மழையை எதிர் கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது பெய்து வரும் கனமழையால் 12 ஆண்டுகளுக்கு பிறகு புயல் ஏதும் இல்லாத சூழ்நிலையில் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள இந்த அடப்பன் குளம் நிரம்பியுள்ளது. இந்த அடப்பன் குளம் நீர்நிலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் மதகுகள் மற்றும் தடுப்பணைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் இக்குளம் நிரம்பி இப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மழைநீர் வாரிகளில் வழிந்தோடும் நிலையை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுப்பணித்துறை குளங்களிலும் தேவையான மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டும், கரைகள் பலப்படுத்தப்பட்டும், எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் தேவையான நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் முழுமையான தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதுபோன்று மாவட்டம் முழுவதும் கனமழை பெய்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்பொழுது அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் மழை பெய்து வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் எவ்வித நோய் தொற்றும் இல்லாத நிலை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்பொழுது பெய்து வரும் கனமழையிலும் எவ்வித நோய் தொற்றும் இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் மழைகாலங்களில் நோய் தொற்றை தடுக்கும் வகையில் காய்ச்சிய நீரை மட்டுமே பருக வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும குடிநீரின் குளோரின் அளவு சரியான அளவுகளில் இருப்பதை உறுதி செய்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தாலுகா மற்றும் தாலுகா அல்லாத மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் காய்ச்சல், இருமல், சளி போன்ற அனைத்து நோய்களுக்கும் தேவையான நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகளும் முழுவதுமாக கையிருப்பில் உள்ளது. இவ்வாறு அமைச்சர் .விஜயபாஸ்கர் தெரிவித்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.