ETV Bharat / state

’தமிழ்நாட்டில் தான் தினசரி 90 ஆயிரம் ஆர்டி பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன’ - அமைச்சர் விஜயபாஸ்கர் - rt pcr check at tamilnadu

சென்னை : இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் ஆர்டி பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ijaya
vijaya
author img

By

Published : Sep 28, 2020, 12:40 AM IST

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், மேலூர் ஊராட்சி, அம்மன்பேட்டையில் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக்கூட கட்டடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கர் நேற்று (செப்.27) திறந்து வைத்தார். இதையடுத்து, மேலூரில் 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூட கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில், கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுமுகம் முன்னிலையில் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ”தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் பொது மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். பொது மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன் வயதானவர்கள், இதர பாதிப்புகள் உள்ளவர்கள் ஆகியோர் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகளால் கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு கரோனா அறிகுறி உடையவர்கள் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொது மக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைய அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு வருபவர்களை நுரையீரல் பாதிப்பின்றி குணப்படுத்தவது எளிது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் கிராமப்புற மருத்துவமனைகளிலும் தேவையான மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. முதலமைச்சர் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளன. இவற்றில் பணிபுரியக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றவர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதுடன், விரைவில் இந்த மினி கிளினிக்குகள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

தமிழ்நாடு ஆக்ஸிஜன் உற்பத்தியில் மிகை மாநிலமாகத் திகழ்ந்து வருவதுடன் தேவைக்கு அதிகமான ஆக்ஸிஜனை அண்டை மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான ஆக்ஸிஜன் வசதி உள்ளது. இதே போன்று கிராமப்புறங்களில் 30 படுக்கைகள் கொண்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 40,000 படுக்கைகள் என்ற எண்ணிக்கையில் ஆக்ஸிஜன் வசதிகள் அமைத்து தரப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் ஆர்டி பிசிஆர் பரிசோதனை நாள் ஒன்றுக்கு 90,000 எண்ணிக்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் பலனாகவே கோவிட் பரிசோதனையில் பிற மாநிலங்கள் தமிழ்நாட்டைப் பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.