புதுக்கோட்டை: மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது தொகுதியான விராலிமலை தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு பொங்கல் சீர் வரிசை பொருட்களை வழங்கினார். இந்தநிலையில், பொங்கல் திருநாளன்று விராலிமலைத் தொகுதிக்குட்பட்ட குரும்பட்டி கிராமத்தைத் சேர்ந்த சில பெண்கள், இலுப்பூரில் உள்ள அமைச்சரின் வீட்டிற்கு வந்து தங்களது வீட்டில் நடக்கும் பொங்கல் விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.
அவர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்ட அமைச்சர், பெண்கள் வந்த ஆட்டோவிலேயே அவர்களை அமரவைத்து, அமைச்சரின் வீட்டிலிருந்து 10 கிமீ தூரம் உள்ள குரும்பட்டிக்கு அவரே ஆட்டோவை ஓட்டிச்சென்று பொங்கல் விழாவில் கலந்துகொண்டார். அங்கு பெண்கள் வைத்த பொங்கலை சாப்பிட்டு அதனைப் பாராட்டினார்.
தன் தொகுதிக்குட்பட்ட பெண்களை ஆட்டோவில் அமர வைத்து, ஆட்டோ ஓட்டிச் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கரின் செயல், அந்த பெண்கள் மத்தியில் மட்டும் இல்லாமல், தொகுதிவாசிகளிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழில் அஞ்சல் துறை தேர்வு எழுதலாம் - சு. வெங்கடேசன் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு!