புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகேயுள்ள பரிவீரமங்களம் பகுதியில் உள்ள ஆற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாகக் காவல் துறையினருக்குப் புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இந்நிலையில், நேற்றிரவு டிராக்டர் மூலம் மணல் திருடுவதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் ஐய்யப்பன், தனிப்பிரிவு தலைமைக் காவலர் நீதிராஜன், தர்மராஜ், சக்திவேல், ராஜகோபால் ஆகியோர் அப்பகுதியில் ரோந்துச் சென்றனர்.
அங்கு டிராக்டர் ஒன்று வருவதைக்கண்ட காவல் துறையினர் அதைத் தடுத்து நிறுத்தி சோதனைசெய்தனர். அப்போது, டிராக்டரில் மணல் திருடிக் கொண்டுவந்தது தெரியவந்தது.
இதையடுத்து, டிராக்டரின் உரிமையாளரும், ஓட்டுநருமான ரமேஷை காவல் துறையினர் கைதுசெய்து டிராக்டரைப் பறிமுதல்செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:என்ன ஒரு வில்லத்தனம்...! டாஸ்மாக் கடையை உடைத்து பாட்டில் திருடிய பாய்ஸ்...!