புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகைபுரியும் முதியோர், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி இன்று தொடங்கிவைத்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், "மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர். மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் மருத்துவ உதவிகள் தேவைப்படும்.
முதியோர், பார்வை குறைபாடு உள்ளவர்கள் எவ்வித சிரமும் இல்லாமல் மாவட்ட ஆட்சியரகத்தில் உரிய மருத்துவ குழுவினர் கொண்டு பரிசோதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
![சிறப்பு மருத்துவ முகாம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pdk-01-03-collectorofcmedicalcamp-script-7204434_03062019143510_0306f_1559552710_692.jpg)
இந்த மருத்துவ முகாம் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், அவரது மருத்துவர் குழுவினர் தலைமையில் வாரம்தோறும் நடைபெற உள்ளது" என்றார்.