ETV Bharat / state

அறந்தாங்கி அருகே கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு - காவல்துறை விசாரணை! - புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகேவுள்ள மங்களநாடு கிராமத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

male-corpse-recovered-near-aranthangi
male-corpse-recovered-near-aranthangi
author img

By

Published : Sep 8, 2020, 7:57 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி(38). இவருக்கு அய்யம்மாள் என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மங்களநாடு பகுதியில் விநாயமூர்த்திக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

இதனால் அவர் அடிக்கடி தோப்பிற்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், தோப்பில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் விநாயகமூர்த்தி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:குமரி அருகே கடையில் கொள்ளை முயற்சி: இருவருக்கு வலைவீச்சு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.