புதுக்கோட்டை மாவட்டம் ஜமீன் வீட்டுத் திருமண விழாவிற்கு மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வருகை புரிந்தார். இவருக்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து இவ்விழாவில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
விழாவில் மணமக்கள் தேவேந்திர பட்னாவிஸ் காலில் விழுந்து ஆசிபெற்றனர். அப்போது, பட்னாவிஸ் மணமக்களை வாழ்த்தினார்.