ETV Bharat / state

மின்னல் தாக்கியதில் மாணவர்கள் உட்பட மூவர் பலி.. புதுக்கோட்டை சோக சம்பவம்! - Lightning Kills Three including

அறந்தாங்கி அருகே பறையத்தூர் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 2 பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 14, 2022, 7:37 PM IST

புதுக்கோட்டை: ஆவுடையார் கோயில் அருகே பறையத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரது அண்ணன் குழந்தைகள் சஞ்சய், சஞ்சனா இருவரும் திருப்புனவாசலில் உள்ள ராமகிருஷ்ணா விவேகானந்தா மெட்ரிக் தனியார் பள்ளியில் சஞ்சய் பதினொன்றாம் வகுப்பும்; சஞ்சனா 10ஆம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் பள்ளி முடிந்து தங்களது சொந்த சித்தப்பா இளையாராஜாவின் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றபோது மூன்று பேர் மீதும் மின்னல் தாக்கியது.

இதில் பலத்த காயங்களுடன் தூக்கி வீசப்பட்ட இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இளையராஜாவை மீட்டு திருப்புனவாசல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். மின்னல் தாக்கி உயிரிழந்த மூன்று பேரின் உடலும் தற்போது மணமேல்குடி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

பள்ளி படிப்பு முடித்து வீட்டிற்கு சென்ற அண்ணன் குழந்தைகள் இருவரையும் வீட்டிற்கு அழைத்து வரும்போது, இளையராஜா மற்றும் அவரது அண்ணன் குழந்தைகள் சஞ்சய், சஞ்சனா மொத்தம் மூன்று பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பறையத்தூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ரேஷன் கார்டுக்கு ரூ.1000 மழை நிவாரணம்; சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவுக்கு முதல்வர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.