புதுக்கோட்டை: கரையபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (22). இவர், அதே பகுதியில் 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 14 வயது சிறுமியை கடந்தாண்டு பிப்.14 தேதி குடிபோதையில் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, பாலியல் வன்புணர்வு செய்தார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமுற்று, ஏப்ரல் 18ஆம் தேதி சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து சிறுமியின் தாயார் புகாரின் பேரில் புதுக்கோட்டை நகர மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையானது, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பில், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளி அஜித்குமாருக்கு ஆயுள் தண்டனையும், 1.50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 2.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி சத்யா உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 'ஹவ் டூ பிரிங் பேக் எக்ஸ்' நூதன முறையில் இளம்பெண் ஏமாற்றம்.. பஞ்சாப் இளைஞர்கள் கைது!