புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் முத்தரசன். இவர் மீது ஆலங்குடி காவல்நிலைய உதவி ஆய்வாளர் சங்கீதா என்பவர் பொய் வழக்கு போட்டதோடு மட்டுமல்லாமல், அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்யக் கோரி கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் அந்த பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.